Posts

லேக்கனாமிர்தம்

Image
  இது என் வலைப்பூ "லேக்கனாமிர்தம் ". பிள்ளையார் சுழி   போடுகிறேன்  -   மகாதேவன்  குரோதி வைகாசி 22  /  2024 ஜூன் 4    தெய்வப் புலவர்   திருவள்ளுவர் குறள் வழியே அளித்துள்ள வளமான   பாரம்பரியத்தை கொண்டா டும் விதமாக சென்னை ராஜ் பவன் (தமிழக ஆளுநர் மாளிகை)   திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம்)   நன்னாளில் (மே 24 அன்று) திருவள்ளுவர் ஜெயந்தி விழா நடத்தியது . விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிகழ்த்திய இந்த உரை பேசுபொருளாகியது.   ஆளுநரின்   ஆங்கில உரையை தமிழாக்கி எடுத்தெழுதினேன். 2024 ஜூன் 7 தேதியிட்ட ‘விஜயபாரதம்’ வார இதழ் இதை அட்டைப்படக் கட்டுரையாக்கியது. எஸ்,எஸ். மகாதேவன் ஆளுநர் உரை ஆ ளுநராக அல்லாமல் திருவள்ளுவரின் சீடன் என்ற முறையில் இன்று சில கருத்துக்களை நான் (ஆர்.என். ரவி) முன்வைக்கிறேன்.   திருவள்ளுவருடனும் திருக்குறளுடனும் என் தொடர்பு ஆழமானது.   இந்த தொடர்பு ஏற்பட்டது பல பத்தாண்டுகளுக்கு முன் , 1964 ல் நான் உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்த போது. ஆங்கிலேய ஆட்சியின் பின்விளைவாக   தேசம் மிக மோ...